துன்பத்தின் மீது காதல் ???
இரண்டவுது வகுப்பு படிக்கும் தன் செல்லப்பையன் அர்ஜுன் பெயரில் வாங்கி இருக்கும் புது வீட்டு விசேஷத்துக்கு குமரனும் தன் குடும்பமும் சந்தோஷமாக குதூகலித்து கொண்டிருக்க, அர்ஜுன் மட்டும் எதுலயும் நாட்டமே இல்லாம ஒரு ஓரத்தில் பரிதாபமாக உட்கார்ந்துக்கொண்டிருந்தான். அர்ஜுனயே கவனித்து கொண்டிருந்த சங்கரன் மாமா ‘என்னடா அர்ஜுன்பையா நீதான் ரொம்ப சுட்டி ஆச்சே இப்போ ஏன் இப்படி டல்லா இருக்கே, உனக்க்காகதானே இந்த வீடே வாங்கிருக்கோம், போடா போய் வந்தவங்களை கவனினு சொல்லசொல்லவே வெறுப்பாக கொல்லைபுறம நடக்கலானான், கட்டிவைத்திருந்த தன் செல்ல நாய்க்குட்டி மிக்கியை தடவிக்கொண்டே முகம் புதைத்தான், தன் நிலைமையை புரிந்தவன் மிக்கி மட்டும் தன என நம்பினான்.
நானு அப்பாகிட்ட எவ்வளோவோ சொன்னேன் மிக்கி, நம்ம ஊர்ல இருக்கிற வீட விட்டுட்டு போக வேணாம்னு அவருதான் கேக்கவே இல்ல. நம்ம ராமு,கணேஷ்,சுனில்,பாப்பு எல்லாருமே அங்கேதானே இருக்காங்க நம்ம மட்டும் இங்கே எப்படி விளையாடறது, ஸ்கூல்க்கு யார்கூட போறது, சைக்கிள் ரேஸ் யார்கூட வைக்கறது எனக்கு இந்த வீடே பிடிக்கல கோவம் கோவம வருதுன்னு பக்கத்தில் இருந்த வாளிய எட்டி உதைத்தான். பேசியது புரியாவிட்டாலும் அர்ஜுன் மனதை புரிந்த மிக்கி உனக்கு நான் இருக்கேன் என்பதுபோல அவனது கால்களை செல்லமாக நக்கியது.
அப்பா அம்மாக்கு ஆபீஸ் பக்கம் என்பதால் தான் இந்த வீடு வாங்கிருக்கோம், தன்னை எல்லாரும் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை, தன் சந்தோஷத்தை யாரும் பார்பதில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது இந்த பிஞ்சு மனசில், அதையே எண்ண எண்ண வெறுப்பாக இருந்தது, சரியாய் சாப்பிடவும் இல்லை, இதனாலயே பயத்தால் லேசாக ஜுரம் வந்து விட்டது. களைப்பாக இருந்ததால் அப்படியே பெட்ரூமில் அசந்து தூங்கிவிட்டான். வந்தவர்கள் அனைவரயும் மனமார கவனித்து அனுப்பி வைத்த பெருமிதத்தோடு குமரனும் தன் மனைவியும் சற்றே ஓய்வேடுத்துவிட்டு இரவு உணவுக்காக எழுப்புகையில்தான் தெரிந்தது அர்ஜுன்க்கு கடுமையான ஜுரம் என்று, புலம்பிக்கொண்டே பக்கத்தில் இருந்த மெடிக்கல் ஷாப்ல மாத்திரை வங்கி வந்து சாப்பிட வைத்தனர், ஒருவருக்கு ஒருவர் விழுந்து விழுந்து கவனித்தனர். அசதியகவே இருந்துனலே சிறிது நேரத்தில் இருவருமே அப்படியே துங்கிவிட்டனர். சற்று நேரம் தூக்கம் வராமல் யோசித்து கொண்டிருந்த அர்ஜுன் மனசில் தோன்றிய எண்ணம, “நம்ம நார்மலா இருந்த இவங்க நம்மள சரியாய் கவனிக்குரதே இல்ல, நம்ம டல்லா இருந்ததன் நல்ல பார்துக்க்றாங்க ”.
புது இடம் என்பதால் சரியாக தூக்கமே வரவில்லை, அதனாலேயே காலை முழிக்கிறப்போவே சோம்பலா இருந்தது அர்ஜுனுக்கு. அம்மா அன்பாக காபியுடன் பக்கத்தில் உட்கார்ந்து என்னடா தங்கம் இப்போ எப்படி இருக்கேனு கேட்டுக்கொண்டே ஜுரம் இருக்கா இல்ல குறஞ்சிருக்கானு தொட்டு பார்த்தாள். எல்லாம் நார்மல் என புரிந்தவள் அர்ஜுன் உனக்கு டல்லா இருந்தா இன்னைக்கு லீவ் போட்டு ரெஸ்ட் எடுதுக்கோடா என்றாள். சற்றே யோசித்தவன், அம்மாவும் அப்பாவும் ஆபீஸ் போய்விட்டால் தனியாக புது வீட்டில் எப்படி இருப்பது என எண்ணிவிட்டு, இல்லமா நா நல்ல இருக்கேன், ஸ்கூல் போறேன்னு சொல்லி கிளம்பினான்.
மதியம்வரை டல்லாகவே இருந்தான், மாலை பள்ளி முடிந்தவுடன் சுனில் மற்றும் பாப்புவுடன் எப்பவும் போல ஸ்கூல்வேனில் புறப்பட்டான். மதியம் சயின்ஸ் கிளாஸ்டெஸ்ட்ல பிரஸ்ட் மார்க் வாங்குனதுக்காக செல்வி மிஸ் சாக்லேட் குடுத்தத பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்கையிலதான் நினைவில் வந்தது அர்ஜுனுக்கு, எப்பவும் போல பழைய ஊருக்கு செல்லும் வேன்ல மறந்துட்டு ஏரிட்டோம்னு, உடனே அடுத்த ஸ்டாப்ல இறங்கி மெதுவ நடக்க ஆரம்பித்தான் புது வீட்டுக்கு. போனாலும் அம்மா அப்பா வர நேரமாகும், கேபிள் இன்னும் போடவில்லை அதனால் போகோவும் பாக்க முடியாது தனியே என்ன செய்யபோகிறோம் என யோசித்து கொண்டே நடந்தான்.
அரைமணி நேரம் நடந்து களைப்பாக வீடு சேர்ந்தான், காலையில் இருந்து புது இடத்தில தனிமையில் வாடிய மிக்கி ஆனந்தமாக ஓடி வந்து அர்ஜுன் கால்களையே வட்டமிட்டது, அவனுக்கும் ஆறுதலாக இருந்தது. மெதுவாக ஜன்னல் ஓரம் வைத்திருந்த சாவியை எடுத்து வீட்டினுள் நுழைந்தான், மேஜைமேல் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து மிக்கிக்கு ஊட்டினான், பின் தனக்காக ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்துவிட்டு கொல்லைப்புறம் உட்கார்ந்தான். பழைய வீட்டில் ஸ்கூல்ல இருந்து வந்தவுடனே நண்பர்கள்கூட்டத்தோடு ரேக்கைகட்டி விளையாட கெளம்பும் அர்ஜுனுக்கு இப்பொழுது தனியாக இருப்பது என்னவோ போல இருந்தது. தன் அப்பா அம்மா இருவரும் வேண்டுமென்றே தன் சந்தோஷத்துக்கு தடை போட்டது போல தோன்றியது, நேரம் ஆக ஆக இன்னும் யாரும் வரவில்லயே நம்மள கவனிக்க யாரும் இல்லையே என எண்ணி அழுகயே வந்துவிட்டது, மிக்கியை பிடித்து தேம்பி தேம்பி அழுதான், அனுதாபத்தில் மிக்கியும் குறைத்துக்கொண்டே இருந்தது.
இரவு ஏழு மணியளவில் வந்த அம்மாவுக்கு சமையல் வேலை செய்யவும், எட்டு மணிக்கு வந்த அப்பாவுக்கு நியூஸ் பார்பதிலுமே நேரம் சரியாக இருந்தது . சூப்பர் சிங்கர் பார்த்துகொண்டே சாப்பிட்டு முடித்தனர் மூவரும். நாள் முழுவதும் உழைப்பதால் அசதியாக இருக்கவே அம்மாவும் அப்பாவும் நேரமாக தூங்கசென்றனர். அம்மா அர்ஜுனிடம் பேசியதெல்லாம் ஹோம்வொர்க் மற்றும் புதிதாக டுயஷன் சேருவதைபற்றி மட்டுமே, அப்பாவுக்கு அதற்கும் நேரம் இல்லை, வீட்டு லோன் எப்படி சமாளிப்பது என்பதிலயே அவர் யோசனை முழுவதும். இதுவரைக்கும் அம்மா கூடவே துங்குன அர்ஜுனுக்கு அவனுக்காகவே தனியாக கட்டுன ரூம்ல முதன்முதலாக தூங்குவது ஒரு தண்டனை போல இருந்தது. மெதுவாக அப்பாவும் அம்மாவும் தன்னை விட்டு பிரிவதை போல தோன்றியது. சற்று நேரம் தூங்கியவன் திடீரென கத்திகொண்டு முழித்தான், ஏதோ கெட்ட கனவு என்று புரியாமல் அழ ஆரம்பித்துவிட்டான். அப்பாவும் அம்மாவும் உடனே வந்து சமாதானப்படுத்தி தங்கள் பக்கத்தில் படுக்க வைத்தனர். அப்படியே தூங்கிவிட்டான்.
மறுநாள் ஸ்கூல்ல பாடத்தில் கவனமே போகல, முந்தின ராத்திரி நடந்ததேயே யோசித்து கொண்டிருந்தான். மறுபடியும் அவன் ஆழ்மனசு சொல்லியது ‘“நம்ம நார்மலா இருந்த இவங்க நம்மள சரியாய் கவனிக்குரதே இல்ல, நம்ம டல்லா இருந்தாதான் நல்ல பார்துக்குறாங்க”. பிறகு அடிக்கடி அப்பா அம்மாவின் முழு அன்பை பெற டல்லா இருப்பதுபோலவே இருந்தான், நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல விளையாடாமல் சுறுசுறுப்பு குறைந்தது, படிப்பிலும் கவனம் குறைந்தது. சற்று தாமதமானாலும் பெற்றோரின் மூளைக்கு எட்டியது அர்ஜுன் நார்மலா இல்லன்னு, பள்ளியில் விசாரித்தபோதும் அங்கும் அவன் இப்படிதான் என்பது புரிந்தது. என்ன செய்வது என புரியாமல் தங்களுக்கு தெரிந்த ஆலோசகரிடம் சென்றனர். எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லி என்ன தான் அர்ஜுனுக்கு ப்ராப்ளம் என வினவினர்.
சற்றே யோசித்த ஆலோசகர் உங்க அர்ஜுன்க்கு ஒரு ப்ராப்ளம் இல்ல குமரன், ப்ராப்ளம் எல்லாம் உங்க மேலயும் நம்ம சமூகம் மேலதான் என பொறுமையாக விளக்க ஆரம்பித்தார். நம்ம ஹுமன் மேண்டாலிட்டி எப்படின “குழந்தைங்க நார்மலா இருந்த பெருசா அக்கறை காட்டுறது இல்ல ஆனா அதே அவங்களுக்கு ஒன்னுனா குடும்பமே ஒண்ணு கூடி அவங்கள தாங்குவோம்”. அப்போ அந்த குழந்தை மனசுல என்ன தொனும்னா , நாம டல்லா இருந்ததன் அதிகமான அன்பு கிடைக்கும்கிற எண்ணம வந்திடும், ஹெல்த் கான்சியுஸ் இல்லாம போயிடும். எப்போ எல்லாம் லோன்லியா பீல் பன்றான்களோ அப்போ எல்லாம் ஹெல்த் டல்லா இருக்கிற மாதிரி பீல் வந்திடும். நம்மதான் பசங்க நல்ல இருக்கறப்போ நிறைய கேர் எடுத்துக்கணும் , ஹெல்த் டல்லா இருக்கறப்போ நீ சரியாய் இல்ல, நீ மாறனும்னு சீக்கிரம் ஸ்ட்ராங்கா வரணும்னு ஊக்கபடுததணும்.
எப்பவுமே குழந்தைங்க மட்டும் இல்ல நம்ம எல்லாருக்கும் துன்பங்கள் மீது ஒரு மறைமுக காதல் இருக்கு, அப்போ தான் நம்மள எல்லாரும் நல்லா கவனிப்பாங்கனு ஒரு எண்ணம. அது எப்பவுமே நம்ம ஹெல்த் கான்சிஸ்ஸ கம்மிப்பண்ணிடும். அதை நம்ம தான் மாத்திக்கணும். ஒருத்தர் நல்லா இருக்கறப்போ முடிந்தளவு அவருமேல அன்பு காட்டனும், டல்லா இருக்கறப்போ அந்த அன்பை அக்கறைய மாத்தனும் தவிர அதயெவே ஊக்கபடுத்த கூடாது. ஹெல்த் ஸ்ட்ராங்கா இருக்கிறது எவ்வளோ முக்கியம்னு ஒவ்வொருத்தருக்கும் தெரியணும், புரிஞ்சி சந்தோஷமா வாழனும்
தெளிவாகவும் சந்தோஷமாகவும் வந்த குமரன் தன் மகன் அர்ஜுனை இரு கைகளுக்குள் கட்டி தழுவினார். எவ்வளவுதான் பிஸியாக இருந்தாலும் இனிமேல் எப்பொழுதுமே அப்பா உன் மீது அன்பாக இருப்பேன் உனக்காகவே நேரம் ஒதுக்குவேன் உன்னை ஸ்ட்ராங்கா வளர்பேன் என்று மனதுக்குள் உறுதி பூண்டார்.
மனேஷ்
Maybe u can practice counselling.. nice story thendral!! Keep the work going.....
ReplyDeleteGood one da....:)
ReplyDelete:-)Thanku kim and Prathiba:-)
ReplyDeleteNa realy nice...expecting more touching blogs from u..
ReplyDeleteThanks guru:-) hopefully:-)
ReplyDeletey blog topic change pannitinga?
ReplyDeletede nalla irukku..
ReplyDeleteaanada vikatan-uku post pannu..
Thanx machi:-)
ReplyDeleteinnum konjum therittu anupuvom machi:-)
neraya area la nama weaka irukom:-)
nice da :)
ReplyDelete