Friday, July 27, 2018

கார்த்திகை பெண்

















கார்த்திகை பெண்

அன்று ஒரு கனவு
அழகான தேவதை ஒருத்தி 
வானத்தில் இருந்து
மெல்ல இறங்கி வருகிறாள்
கண் முன்னே நிற்கிறாள்
விண் மீனாய் ஜொலிக்கிறாள்
கார்த்திகை பெண்களில் ஒருத்தி நான்
கார்த்திகேயனின் அன்னை நான் உங்களுடன் உறவில் கலக்க
கார்த்திகை நாளன்று
கட்டாயம் வருவேன்
காத்திருங்கள் என
கவிதையாய் கலந்தாள்
காணாமல் போகினாள்
கனவும் கலைந்தது , கவலையும் சூழ்ந்தது.
என்ன அதிசயம் ?
கார்த்திகை நாளன்று 
கண் முன்னே காட்சி தருகிறாள்
கவினுடன் அந்த இளம் தேவதை
கை கால் புரியவில்லை
கிள்ளிப் பார்க்கிறேன்
நிஜமான நிஜம் தான்.
அழகான மலராய் சிரிக்கிறாள்
அடுத்த நொடி அழுகிறாள்.
காலம் முழுவதும்
உங்களுடனே வாழ்கிறேன் என்று
காவியமாய் சிரிக்கிறாள்
ஓவியமாய் மிளிர்கிறாள்
நீங்கள் தேடிய
தேவதை வந்து விட்டேன் என்று
தேன் மழை பொழிகிறாள்
இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை திருக் கார்த்திகை

அப்பா...

Thursday, July 26, 2018


இந்த நொடி- இந்த நேரம் 

உன் வருகைக்காக காத்திருந்த
இந்த நொடியும்-நேரமும்
மிக வேகமாகவும்-மித வேகமாகவும் 
அமைதியற்று ஓடுவதை சற்றே நிதானப்படுத்தி
இப்பொழுது நின்று விட்டதை உணர்கிறேன்...

அவள் பிறந்துவிட்டாள்

விலை மதிப்பில்லா இந்த மூன்று கிலோ
அதிர்ஷ்ட புதையலின்
முதல் ஸ்பரிசம்  - அளவில்லா ஆச்சிர்யம்
முதல் அழுகை - இணையில்லா இசை
பிஞ்சு  உடல் அசைவுகள்  - ஒப்பில்லா ஓவியம்
உன் முதல் பார்வை - என் தேடலுக்கான தொடக்கம்
தொடக்கத்திற்கான விதை

இதுபோல் சிறந்த தருணம் வேறொன்றும் இருந்ததில்லை
இனிமேலும் இருக்குமா என தெரியவும்  விருப்பம் இல்லை
இந்த நொடி- இந்த நேரம்   
மீண்டும் புதிதாய்  நகர்வதை உணர்கிறேன்
அவளுக்காக !!!!

மனேஷ் .எல் 




Saturday, June 30, 2018

காத்திருக்கிறேன் ....










உன் வருகைக்காக
ஒரு கவிதை  எழுதலாம் என கண்களை மூடி
யோசிக்கிறேன் ...
உள்ளுக்குள் பல வண்ணம் போல எண்ணங்கள்
கோர்வையாக  பிறக்க மறுக்கும் வார்த்தை பின்னல்கள்
ஒரு நொடி நிழல் - நிஜம்
மறு நொடி  அச்சம் - வியப்பு
வேறுஒரு நொடி உண்மை - பொய்
பின்பு பக்கம் - தூரம் என அலைபாயும்
இந்த  எண்ணச்சிதறல்களுடன்
 நீ பிறக்கும்வரை
அமைதியற்று காத்திருப்பது
சுமை -சுகம் !!!


மனேஷ் .எல்

Wednesday, June 22, 2016

MADHUVAE ENNAE... (IN BADAGA )


















Cooker kuave... 
Malligai huvae... 
Enna mamma nennae... 
Indhu madhuvae thane... 

Mamma manae... 
Ini Ninnudhau thane... 
Mammi mamma... 
Ninna  Avvuae appaa... 

Makka Mari.. 
Nee mooru ethu... 
Maadi Manae... 
Katti Badhukki baari... 


Cooker kuave... 
Malligai huvae... 
Enna mamma nennae... 
Indhu madhuvae thane... 


Gavava beeri suussi... 
Gandana gowda maadi... 
Thottava bevara maadi 
Dhodda dhodda sothu saethi.. 

Aiya Yethaega sevamaadi.. 
Sondha bandahava badhuki baari... 
Dhevara naamae yaegi... 
Kunavayaa Kalchi maadi... 


Cooker kuave... 
Malligai huvae... 
Enna mamma nennae... 
Indhu madhuvae thane... 


Olithu olla maadi.. 
Kudumba gauravava kaapae... 
Gava soga maadi 
Seemaya ssingara maadi...



ரசிக்கத்தானே..















நெடுந்தூரப் பயணம்... 
சற்றே நிதானமாக நகரும் நொடிகள்

 நினைவுகளில் ... 
 நெகிழ்ந்த நிமிடங்களும் ,
 நிகழும் நொடிகளும், 
 நட்பாகும் இயற்கையும், 
 நல்லோர்கள் சுற்றமும்,  
அவ்வப்போது நினைவு படுத்துகிறது 
 ரசிக்கத்தானே வாழ்க்கை...


Wednesday, November 27, 2013

கண்டதும் காண்பதும் கவிதையே

விடியாத இரவில் - கலையாத கனவுகள்
திறக்காத கண்களில் - தீராத நினைவுகள்
நிஜமாகும் நினைவுகள் - நிழலென தினம் தினம்
நிஜங்களே நினைவாகும் மெய் பொய்யாகி
கனவான நினைவுகளெல்லாம் - நிஜமாக நிகழ்கிறதே
கனவு நிகழ்வதால் - நெகிழ்வதா, இல்லை
நிழல் நிஜமாவதால் - நடந்ததை நடிப்பதா
நிலையில்லாமல் - நடப்பதையே நினைப்பதா
நடப்பது நடந்ததால் - நகைப்பதா
கனவாக கலைந்தாலும்
நிஜமாக நிகழ்ந்தாலும்
கண்டதும் காண்பதும் கவிதையே !!!
மனேஷ்.L

Thursday, March 8, 2012

கண்ணீர்














முட்டி மோதி முதன் முறையாக இந்த உலகத்தை
எட்டி பார்க்கையில் - கண்ணீர் அறியாமை

நடுஇரவில் செய்வதறியாமல் அம்மாவின் அரவணைப்புக்கு
ஏங்குகையில் - கண்ணீர் பிணைப்பு

முதல் நாள் பள்ளி செல்ல பயந்து அப்பாவின் கையை
விடாமல் பற்றிகொள்கையில் – கண்ணீர் தவிப்பு

விடுதியில் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் திரும்ப
திரும்ப அம்மா பார்க்கையில் – கண்ணீர் ஏக்கம்

பரீட்சைக்கு முதல் நாள், பாசமே வடிவான பாட்டி இறைவனடி
சேர்ந்த செய்தி நெஞ்சை அடைக்கையில் - கண்ணீர் வேதனை

முதல் நாள் அந்நியமாக தோன்றிய கல்லூரி விடுதி, கடைசி நாள்
நண்பனை கட்டியணைத்து பிரிகையில் – கண்ணீர் நட்பு

வேலைதேடி துவண்டவனை, நான் இருக்கிறேன் நீ வெல்வாய்
என காதலி கட்டியணைக்கையில் – கண்ணீர் கவிதை

அப்பன் சத்தியத்திற்காக, எனை மறந்து எவனோ ஒருவனோடு
மணமேடையில் அவள் நிற்கையில் – கண்ணீர் வலி

படிப்படியாக எனை பார்த்து பார்த்து வளர்த்த தந்தையை, கடைசியாக
மரணப்படுக்கையில் பார்த்தபொழுது – கண்ணீர் இழப்பு

உறவின் உன்னதத்தை உணரவைத்த , என் பிஞ்சுக்குழந்தையை
முதல்முறை சுமக்கையில் - கண்ணீர் உயிர்

கடைசியாக வந்த இடத்திற்கு திரும்புகையில்
கண்ணீர் – வாழ்க்கை


மனேஷ்....