Friday, July 27, 2018

கார்த்திகை பெண்

















கார்த்திகை பெண்

அன்று ஒரு கனவு
அழகான தேவதை ஒருத்தி 
வானத்தில் இருந்து
மெல்ல இறங்கி வருகிறாள்
கண் முன்னே நிற்கிறாள்
விண் மீனாய் ஜொலிக்கிறாள்
கார்த்திகை பெண்களில் ஒருத்தி நான்
கார்த்திகேயனின் அன்னை நான் உங்களுடன் உறவில் கலக்க
கார்த்திகை நாளன்று
கட்டாயம் வருவேன்
காத்திருங்கள் என
கவிதையாய் கலந்தாள்
காணாமல் போகினாள்
கனவும் கலைந்தது , கவலையும் சூழ்ந்தது.
என்ன அதிசயம் ?
கார்த்திகை நாளன்று 
கண் முன்னே காட்சி தருகிறாள்
கவினுடன் அந்த இளம் தேவதை
கை கால் புரியவில்லை
கிள்ளிப் பார்க்கிறேன்
நிஜமான நிஜம் தான்.
அழகான மலராய் சிரிக்கிறாள்
அடுத்த நொடி அழுகிறாள்.
காலம் முழுவதும்
உங்களுடனே வாழ்கிறேன் என்று
காவியமாய் சிரிக்கிறாள்
ஓவியமாய் மிளிர்கிறாள்
நீங்கள் தேடிய
தேவதை வந்து விட்டேன் என்று
தேன் மழை பொழிகிறாள்
இனி எங்கள் வீட்டில் எல்லா நாளும்
கார்த்திகை திருக் கார்த்திகை

அப்பா...

Thursday, July 26, 2018


இந்த நொடி- இந்த நேரம் 

உன் வருகைக்காக காத்திருந்த
இந்த நொடியும்-நேரமும்
மிக வேகமாகவும்-மித வேகமாகவும் 
அமைதியற்று ஓடுவதை சற்றே நிதானப்படுத்தி
இப்பொழுது நின்று விட்டதை உணர்கிறேன்...

அவள் பிறந்துவிட்டாள்

விலை மதிப்பில்லா இந்த மூன்று கிலோ
அதிர்ஷ்ட புதையலின்
முதல் ஸ்பரிசம்  - அளவில்லா ஆச்சிர்யம்
முதல் அழுகை - இணையில்லா இசை
பிஞ்சு  உடல் அசைவுகள்  - ஒப்பில்லா ஓவியம்
உன் முதல் பார்வை - என் தேடலுக்கான தொடக்கம்
தொடக்கத்திற்கான விதை

இதுபோல் சிறந்த தருணம் வேறொன்றும் இருந்ததில்லை
இனிமேலும் இருக்குமா என தெரியவும்  விருப்பம் இல்லை
இந்த நொடி- இந்த நேரம்   
மீண்டும் புதிதாய்  நகர்வதை உணர்கிறேன்
அவளுக்காக !!!!

மனேஷ் .எல் 




Saturday, June 30, 2018

காத்திருக்கிறேன் ....










உன் வருகைக்காக
ஒரு கவிதை  எழுதலாம் என கண்களை மூடி
யோசிக்கிறேன் ...
உள்ளுக்குள் பல வண்ணம் போல எண்ணங்கள்
கோர்வையாக  பிறக்க மறுக்கும் வார்த்தை பின்னல்கள்
ஒரு நொடி நிழல் - நிஜம்
மறு நொடி  அச்சம் - வியப்பு
வேறுஒரு நொடி உண்மை - பொய்
பின்பு பக்கம் - தூரம் என அலைபாயும்
இந்த  எண்ணச்சிதறல்களுடன்
 நீ பிறக்கும்வரை
அமைதியற்று காத்திருப்பது
சுமை -சுகம் !!!


மனேஷ் .எல்