Thursday, March 8, 2012

கண்ணீர்














முட்டி மோதி முதன் முறையாக இந்த உலகத்தை
எட்டி பார்க்கையில் - கண்ணீர் அறியாமை

நடுஇரவில் செய்வதறியாமல் அம்மாவின் அரவணைப்புக்கு
ஏங்குகையில் - கண்ணீர் பிணைப்பு

முதல் நாள் பள்ளி செல்ல பயந்து அப்பாவின் கையை
விடாமல் பற்றிகொள்கையில் – கண்ணீர் தவிப்பு

விடுதியில் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் திரும்ப
திரும்ப அம்மா பார்க்கையில் – கண்ணீர் ஏக்கம்

பரீட்சைக்கு முதல் நாள், பாசமே வடிவான பாட்டி இறைவனடி
சேர்ந்த செய்தி நெஞ்சை அடைக்கையில் - கண்ணீர் வேதனை

முதல் நாள் அந்நியமாக தோன்றிய கல்லூரி விடுதி, கடைசி நாள்
நண்பனை கட்டியணைத்து பிரிகையில் – கண்ணீர் நட்பு

வேலைதேடி துவண்டவனை, நான் இருக்கிறேன் நீ வெல்வாய்
என காதலி கட்டியணைக்கையில் – கண்ணீர் கவிதை

அப்பன் சத்தியத்திற்காக, எனை மறந்து எவனோ ஒருவனோடு
மணமேடையில் அவள் நிற்கையில் – கண்ணீர் வலி

படிப்படியாக எனை பார்த்து பார்த்து வளர்த்த தந்தையை, கடைசியாக
மரணப்படுக்கையில் பார்த்தபொழுது – கண்ணீர் இழப்பு

உறவின் உன்னதத்தை உணரவைத்த , என் பிஞ்சுக்குழந்தையை
முதல்முறை சுமக்கையில் - கண்ணீர் உயிர்

கடைசியாக வந்த இடத்திற்கு திரும்புகையில்
கண்ணீர் – வாழ்க்கை


மனேஷ்....

12 comments:

  1. Manesh,

    You express emotions through your words.
    Too good and this one made me think about the value of relationship.
    Keep writing.

    ReplyDelete
  2. Nanba pinnita... all emotions in one post.. but anandham missing :)

    ReplyDelete
    Replies
    1. உறவின் உன்னதத்தை உணரவைத்த , என் பிஞ்சுக்குழந்தையை
      முதல்முறை சுமக்கையில் - கண்ணீர் உயிர் .. thought this line will make for it thala:-)anyway super thanks nanba:-)

      Delete
  3. எனை மறந்த நிலையில் நான் இருக்க..
    உன் கவிதை என்னிடம் சொன்னது - கண்ணீர் காவியம்

    Great expressions of feelings through a great thought!
    Keep going Thendral :-)

    ReplyDelete
  4. miga arumai... kaneer oru unarchi...intha kavithayai paditha piragu antha unarchi ku ithanai unarvugal ahh!!!!!... paaratukal kavingarea.. keep writting..

    ReplyDelete