மச்சி ரோஸ்மேரி டா!!!
டைம்ஸ் நியூஸ்ல தலைவரின் எந்திரன் பத்தி ஸ்பெஷல் ஷோ ரசிச்சி பார்த்துகிட்டு இருக்கறப்போ என் செல் போன்ல டெக்ஸ்ட் மெசேஜ் பாண்டி கிட்ட இருந்து, ‘மச்சி ஆபீஸ் ல இருந்து வர லேட் ஆகும் வெயிட் பண்ணாதிங்க நீங்க சாப்பிட்டுருங்க, கேட் பூட்டாதிங்க டா’.
தலபாகட்டு பிரியாணி சாப்பிட்ட தெம்போட டென் ஸ்போர்ட்ஸ் பார்த்துகிட்டே, யு.எஸ் ஓபன் ல டைட்டில் பெடரேர்க்கு தான் டா, நடால் வேஸ்ட் மச்சினு, சிவாவ வம்புக்கு இழுக்கவே டக்குனு கரண்ட் போயிடிச்சு, இன்னைக்கு சிவ ராத்திரி தான் மாமா, வா மோட்ட மாடிக்கு போவோம்னு நடைய கட்டுனோம்.
மச்சி அந்த ஷாலினிய இன்னைக்காவுது இன்ட்ரோ குடுடானு சிவா கிட்ட 100 ஆவது முறைய கேக்க கேக்கவே என் செல் போன் அலற.. தீபா காலிங்...... அட்டென்ட் பண்ணி காதுல வச்சனோ இல்லையோ வெடிக்க ஆரம்பிச்சிட்டா ‘ டே நீ எல்லாம் ஒரு பாய் பிரண்டா, எருமே, மானம் கெட்டவனே, மனசாட்சியே இல்லாம என் பர்த்டேக்கு கோல்ட்ரிங்னு சொல்லி இப்படி கவரிங்க குடுத்து ஏமாத்திட்டியே, படுபாவி, நீ உருப்படவே மாட்டே டா.... ( காதலி கிட்ட திட்டு வந்குரதுல தான் எவ்வளோ ஆனந்தம்)...கொஞ்சமா இருந்த பேட்டரி எம்ட்டி ஆக,. நல்ல வேளை சார்ஜ் இல்லாம தப்பிச்சோம்ட சாமினு பெருமூச்சு விடுரதுகுள்ள ‘ மச்சி உன் ஆளு தீபா லைன்லடா’ இந்தா பேசுன்னு சிவா அவனோட மொபைல அன்பா நீட்டினான்,
நண்பன பெருமை படுத்தி பாக்குரதுல எவ்வளோ சந்தோஷம்ட உங்களுக்குல்லாம். நடத்துங்கடா.....
அடுத்த பத்து நிமிஷத்துல அந்த மொபைலும் ச்விட்ச் ஆப், இந்தவாட்டி தானா ஆகல , ஆனா என்னாலயும் முடியல, பேசாம நம்ம டீம் லீடே தேவலடா ஆபீஸ்யே இருந்திர்கலாம்னு தோனுச்சு....திட்டியே எவ்வளோ டயர்து ஆக்கிட்டா.....
டே மச்சி ஷாலினி இன்ட்ரோ கேட்டியேனு சிவா ஆரம்பிக்ரதுகுள்ள அவனுக்கு ஒரு பெரிய கும்ம்புடு ... ஆள விடற சாமி....
நல்ல வேளை கரண்ட் வந்திடுச்சுனு திருப்பியும் ரூம்க்கு வந்து மொபைல சார்ஜ் ல போட்டுட்டு சுவிட்ச்ஆன் பண்ணஉடனேவெ பாண்டி காலிங்.....
‘சார் உங்க பிரண்டுக்கு பைக் ஆக்சிடென்ட் ,சீக்கிரமா கிளம்பி பெருங்குடி லைப் லைன் ஹஸ்பிடலுக்கு வாங்க’...
ஹலோ ஹலோ னு ரியாக்ட் பண்றதுகுள்ள லைன் கட் ஆயுடிச்சு.....
அப்படியே தூக்கிவாரி போட்ட மாதிரி இருந்துச்சு,....
(மைனர் தானா இல்ல மேஜர் ஆக்சிடென்டா, உயிரோட இருக்கானா, பெரிய அடியா , என்ன ஆச்சு னு தெரியலயே என என்னவெல்லாமோ யோசிக்க போயிடிச்சி மனசு.....)
திருப்பி கால் .... சார் ஒரு டாக்ஸி இவரு வந்த பைக்ல மோதிடிச்சு, எமேர்ஜென்சி வார்டுல இருக்காரு, நீங்க பொறப்பட்டு வாங்கனு சொல்லிடு வச்சிட்டார்.
கையும் ஓடல காலும் ஓடல... படபடப்பாவே இருந்துச்சு....
உடனடியா நானும் சிவாவும் என் பைக்ல போரப்பட்டோம்...
அடுத்த 5 நிமிஷத்துல திருவான்மியூர் சிக்னல்ல,
போலீஸ்.....
தம்பி நில்லு நில்லு , ஏன் இப்படி ஓவர்ஸ்பீடா போறீங்க,
பேபெர்ஸ் எடு, லைசென்சு எங்கே...,
குடிசிருகிங்க்ளா.. ஊது... ஊது....
சார் என் பிரண்டுக்கு பைக் ஆக்சிடென்ட் , பெருங்குடி லைப் லைன் ஹஸ்பிடலுக்கு போய்கிட்டிருகோம் , ப்ளீஸ் சார் எங்கள போக விடுங்க...
இவ்வளோ ஓவர்ஸ்பீடா போன நீங்களும் போய் படுக்க வேண்டியது தான்,
இன்னைக்கு ஏரியால மட்டும் ரெண்டு பைக் காணாம போயிருக்கு, உங்க பபெர்ஸ் எடுங்கப்பா...
சார் அவசரத்துல எடுக்க மறந்துட்டேன் , ப்ளீஸ் சார், எங்கள விடுங்க எல்லா பேபெர்ஸும் நாளைக்கு காட்டறேன் சார்...
எங்கே இருக்கீங்க? என்ன பண்றீங்க?
அடையார்ல சார், இங்கே, இங்கேதான் சார் டைடல் பார்க்ல ஒரு சாப்ட்வேர் கம்பெனில வொர்க் பண்றோம்....
சார் ப்ளீஸ் சார் ரொம்ப எமேர்கேன்சி சார் ப்ளீஸ் ப்ளீஸ்....
உங்கள எப்படி நம்பறது , சரி உங்க மொபைல் நம்பர் குடுத்துட்டு போங்க, நாளைக்கு வந்து அடையாறு ஸ்டேஷன்ல பேப்பர் எல்லாத்தையும் காட்டிடுங்க.. இப்போ ஒரு 100 ரூபா குடுத்துட்டு போங்க.... விட்ட போதும்னு அவங்க கேட்டத குடுத்துட்டு உடனே கேளம்புனோம்...
இப்போ எல்லாம் திருடன பார்த்த குட தேவல இந்த போலீஸ் காரனுங்க தொல்ல தங்கவே முடியல டா, மனசாட்சியே இல்லாத ஆட்கள், காசுன அலையரனுங்கனு தன் எரிச்சலை கொட்டி தீர்த்தன் சிவா....
ஆமா மச்சி நம்மள காக்ரானுன்களோ இல்லையோ நல்ல கழுத்த அறுக்குரானுங்க...பன்னாட பசங்க........
பாண்டி வேற எப்படி இருக்கனொன்னு தெரியலையேனு என் பங்குக்கு நானும் புலம்பினேன்....
ஒரு வழியா லைப் லைன் ஹாஸ்பிடல் வந்து செர்ந்தோம்....
வாங்க சார் நீங்க தான் பாண்டிய பாக்க வந்திங்கள...
ஆமாங்க... எங்கே அவன்.. எப்படி இருக்கான்.... எப்படி ஆச்சு...
நல்ல வேளை சார் பெருசா உயிருக்கு ஒன்னும் ஆபத்தில்லே,
கால்ல தான் கொஞ்சம் அடி, அதில்லாம கைல, முகத்துல எல்லாம் கொஞ்சம் கீறல்.
ஒரு கால் டாக்ஸிகாரன் அடிச்சிட்டு நிறுத்தாம போய்ட்டான் சார், நல்ல வேளை தம்பி இன்னும் ஒரு மீட்டர் தள்ளி விழுதிருந்தாருன அந்த சாக்கட கம்பியில மாட்டி இருப்பாரு ... கடவுள் புண்ணியத்துல உயிர்ருக்கு ஒன்னும் ஆகலப்பா....
இன்னும் எனக்கு படபடப்பு அடங்கவே இல்ல, வெளியே வந்த நர்ஸ் கிட்டே,
சிஸ்டர் பாண்டி எப்படி இருக்கான்?
அங்கே இங்கேனு நெறைய கீறல் தான் 16 ஸ்டிச் போட்டிருகோம், கால்ல ச்வேல்லிங் இருக்கு, காலைலேதான் ஸ்கேன் பண்ணி பார்க்கணும், பத்து நிமிஷத்துல ரூம்ல போட்டுடுவோம்,அப்புறம் நீங்க போய் பாக்கலாம்....
எனக்கே ரெஸ்ட்லேஸ்ஸா இருந்துச்சு... பாண்டி எப்படி வலி எல்லாம் தாங்கிருபானு நினைக்கவே கஷ்டமா இருந்துச்சு ,
டே பாண்டி கொஞ்சம் பார்த்து வந்துருக்லாம்ல, எப்படிட இருக்கு இப்போ?....
அவன் முகம் வீங்கி இருந்ததாலே அவனாலே சத்தமா பேச முடியல...
அவன் சொன்னது சரியா கேக்கலேனு என் காதை அவன் முகம் பக்கத்துல போனேன்....
மச்சி அந்த நர்ஸ் பேர் ரோஸ்மேரிடா......சூப்பர்ல
Idhellam oru pozhapu...
ReplyDeleteNalla irunga.pa...
machi.. intha sambavam - maapi accident near LifeLine-a da..
ReplyDeleteavan enkitta entha Rosemary-a pathiyum sollalaye.. pannada payal..
payapulla pala ragasiyangala olichi vachirukan machi:-)
ReplyDeleteDei ennada nadkkuthu inga..?
ReplyDeletenaaa.. ethana story na kaivasam vaichu irukeenga??
ReplyDeletecomparatively smaller post and more interesting ending. tamil serial range ku ending iruku na. Good and easy to read in tamil language.
Waiting for the next post na..
@azad:-) - rosemary machi:-)
ReplyDelete@allvin - thanks da aalvin:-)hopefully will comeup with more interestin and short stories:-)
hahahaha.. good one machaa..
ReplyDeleteungalala matum epadi ipadi elam?
ReplyDeleteoru chinna comedy lina nalla develop panni alaga eludhirukinga.... nice...
ReplyDeleteTANKU TANKU:-)
ReplyDeletesuperB ji great clima"X"
ReplyDeleteNandri Thalaiva!!!
Delete