Saturday, August 20, 2011

கல்லறைகளுக்கு பஞ்சமில்லை!!!


நீ பாதி, நான் பாதி, என்றதுதான் என் தவறோ
மறு பாதியுடன் மனம்மாறி
மாற்றானின் மாங்கல்யத்தை சுமந்தாயே....
உனக்காகவே பிறந்தேனென்று ரகசியமாய் சொன்னேனே
ஊருக்கே விருந்தளித்தும்,
எனக்கு மட்டும் விடை கொடுத்தாயே.......
என் பார்வை உன் கண்கள் என்றேனே
எதிரே வந்தும்கூட
எங்கே என தேட வைத்தாயே......
நீ கிடைத்தால் சாதி மதம் சாகும் என்றேனே
நாம் இணைந்தால் நம்மைபெற்ற
இதயங்கள் வாடுமென என்னை எரித்தாயே.....
சாதி மதம் வாழும்வரை
கல்லறைகளுக்கு பஞ்சமில்லை!!!

மனேஷ்

1 comment: